கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் வேண்டிவயவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். உங்களது செயல்களால் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் மனகவலைகள் குறையும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். உறவினர்களை சந்திக்க பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் வருகையும் அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். குடியிருக்கும் வீட்டை சீரமைப்பதில் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பண சேமிப்பை அதிக அதிகப்படுத்துவீர்கள். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்து கொள்வார்கள். மேலும் உயர் அதிகாரிகள் உங்கள் நடத்தையால் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் விளைவாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.உத்யோகம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com